Sunday, May 3, 2026
No menu items!

Monthly Archives: May, 2025

நீர்கொழும்பு தலாதுவ பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு!

நீர்கொழும்பு, தலாதுவ பிரதேசத்தில் நேற்று (28) பிற்பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடந்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2 நபர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் மற்ற நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிச் சூட்டில் எந்த உயிர் பலியும் ஏற்படவில்லை...

தெற்கு மாகாணத்தில் குற்றவாளிகளை கைது செய்ய புதிய மோட்டார் சைக்கிள் பிரிவு ஆரம்பம்!

தெற்கு மாகாணத்தில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் துப்பாக்கி வன்முறைகளுக்கு எதிராக விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள, மூத்த பிரதி காவல் ஆய்வாளர் (SDIG) கித்சிரி ஜெயலத் தலைமையில் ஒரு சிறப்பு மோட்டார் சைக்கிள் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபட்டு தப்பி ஓடும் சந்தேக நபர்களை, குறிப்பாக துப்பாக்கிகள் சம்பந்தப்பட்ட சம்பவங்களில், விரைவான நடவடிக்கை மிக முக்கியமானதாகக்...

கொத்தலாவல மருத்துவ பட்டப்படிப்பு நிறைவை அரசாங்கம் எடுத்தது  தவறு – சஜித் பிரேமதாச!

ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டப்படிப்பை நிறுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளமை பாரியதொரு தவறு என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு உள்நாட்டு மாணவர்களைச் சேர்ப்பதை நிறுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விசேட அறிவிப்பொன்றை விடுத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த மருத்துவப்...

இன்றைய நாளுக்கான வானிலை!

நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் இன்று மாலை முதல் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் கூறினார். மத்திய,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அவர் மேலும் தெரிவிக்கையில், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில...

அமைச்சரவை மாறுமா? சுனில் ஹந்துனெத்தி விளக்கம்..!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விரைவில் கவிழும் என்ற எதிரணியின் பிரச்சாரம் நகைச்சுவைத்தனமானது என அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். அமைச்சரவை மாற்றம் நடக்கவுள்ளதாக வெளியாகும் தகவல்கூட அரசியல் சூழ்ச்சியின் ஓர் அங்கம் தான் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு கூட்டு...

தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அடுத்த மாதம்..!

தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு திருத்தச் சட்டமூலத்தை இரண்டாம் வாசிப்பிற்காக அடுத்த மாதம் 03ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அனுமதி பெறப்பட்டுள்ளது. குறித்த துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் டொக்டர் ஜனக சேனாரத்ன தலைமையில் நேற்று(27) கூடியிருந்தது.

பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக அஜித் பி பெரேரா!

உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவுசெய்யப்பட்டார். பாராளுமன்றத்தில் நேற்று (27) இடம்பெற்ற பத்தாவது பாராளுமன்றத்திற்கான குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுவின் கூட்டத்தின் முதலாவது அமர்விலேயே இத்தெரிவு இடம்பெற்றது. இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவருக்கு வழங்க...

தடகள செம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள இலங்கை வீரர் !

தென் கொரியாவில் இடம்பெறும் 26வது ஆசிய தடகள செம்பியன்ஷிப் போட்டியில் இன்று (28) நடைபெற்ற 400 மீட்டர் ஓட்டப்போட்டியில் இலங்கை வீரர் காலிங்க குமாரகே வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். அவர் இந்த ஓட்டப்போட்டியை 45.55 வினாடிகளில் முடித்துள்ளார். கட்டாரின் அமர் இப்ராஹிம் 45.33 வினாடிகளில் ஓடி இந்த போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். இந்த போட்டியில் ஜப்பானின் கென்டாரோ...

வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் தபால் நிலையங்கள்!

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் இன்று நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளது. தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஜி.ஜி.சி.நிரோஷன் தெரிவித்தார். ஆட்சேர்ப்பு செயற்பாட்டில் ஏற்படும் தாமதங்களை நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.  

இளைஞர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை – சிக்கிய தாயும் மகனும்..!

இளைஞர் மற்றும் யுவதிகளை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கெக்கிராவை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அநுராதபுரம், மல்தெனிபுர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன் போதே சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 60 வயதுடைய தாயும் 18 வயதுடைய மகனுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து ஐஸ், ஹெரோயின்...
- Advertisement -spot_img

Latest News

சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு கடுங்காவல் தண்டனை!

15 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தம்ம பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு, மொனராகலை உயர் நீதிமன்ற நீதிபதி டொக்டர் தமித் நலிந்த...
- Advertisement -spot_img