Sunday, May 3, 2026
No menu items!

Monthly Archives: May, 2025

சதொச மோசடி வழக்கு; முன்னாள் அமைச்சர்கள் இருவருக்கு கடூழிய சிறை தண்டனை!

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நளின் ருவான்ஜீவ பெர்னாண்டோ ஆகியோர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தநிலையில் முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு 10 ஆண்டுகால கடூழிய சிறை தண்டனையும், நளின் ருவான்ஜீவ பெர்னாண்டோவுக்கு...

மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியில், ஆண் ஒருவரின் சடலம் ஒன்றை நேற்று புதன்கிழமை மீட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர். 38 வயது நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதுடன் அவருக்கு அருகில் இருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். திக்கோடை சந்திக்கு அருகாமையில் உள்ள வீதியின் மதகு ஒன்றிற்கு அருகில் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. அம்பலாந்துறையைச் சேர்ந்த...

வீதி நடைபாதையை ஆக்கிரமித்துள்ள வர்த்தகர்களை அகற்ற நடவடிக்கை!

வீதி நடைபாதையை ஆக்கிரமித்துள்ள வர்த்தகர்களை உடனடியாக அகற்றவேண்டும் என கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் அறிவித்தல் விடுத்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட வீதி பாதுகாப்பு குழு கூட்டம் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய மாநாடு மண்டபத்தில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி.லலித் லீலாரத்தின தலைமையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட...

கோரிக்கைகள் இணைந்த மகஜர்: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் தபால் அதிகாரிகள் சங்கம் கையளிப்பு!

தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் இன்று (29) கையளிக்க திட்டமிட்டுள்ளதாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று முற்பகல் தபால் தலைமையகத்திற்கு முன்னால் இடம்பெறும் போராட்டத்தைத் தொடர்ந்து, மகஜர் வழங்குவதற்காக சுகாதார அமைச்சுக்கு பேரணியாகச் செல்லவுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது. 15 கோரிக்கைகளை முன்வைத்து,...

பாணந்துறையில்  துப்பாக்கிச் சூடு!

பாணந்துறை தெற்கு வேகட பகுதியில் இன்று (29) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாகனம் பழுது பார்க்கும் நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர் ஒருவரை இலக்கு வைத்து இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பணிபுறக்கணிப்பிற்கு தயாராகும் இலங்கை வங்கி சேவையாளர்கள் சங்கம்!

இன்று மதியம் 12.30 க்கு பின்னர் சகல இலங்கை வங்கிக் கிளைகளிலும் தங்களின் நடவடிக்கைகளில் இருந்து விலகி, பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதற்கு இலங்கை வங்கி சேவையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இப் பணிபுறக்கணிப்பானது ஊக்குவிப்பு தொகை குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்றைய தினத்துக்குள் தங்களுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் 6 ஆம் திகதி அடையாளப்...

போலி விளம்பரங்கள் மூலம் சமூக ஊடகங்களில் மோசடி; ஒருவர் கைது!

விற்பனைக்கு உள்ள வாகனங்களின் விளம்பரங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு பணத்தை மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது. நிதி மோசடி தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தொடங்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பலாங்கொடை நகரில் உள்ள ஹல்துமுல்ல காவல் நிலைய அதிகாரிகள் குழுவினால் நேற்று (மே 28) சந்தேக நபர்...

சூதாட்ட விளையாட்டு ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் வர்த்தமானி வெளியீடு!

சூதாட்ட விளையாட்டு ஒழுங்குபடுத்தல் அதிகார சபையை நிறுவுவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கான வரைவு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரின் உத்தரவுக்கு அமைவாக குறித்த வர்த்மானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் சீட்டாடுதல் மற்றும் விளையாட்டு நிறுவனங்களை தரநிர்ணயப்படுத்தல், சமூகப் பாதிப்புக்களைக் குறைத்தல், சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கு விரிவானதும் முழுமையானதுமான விடயதானத்துடன்...

இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணி எது? RCB ஆ PBKS ஆ?

ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின் முதலாவது தகுதிச்  சுற்றில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ரோயல் சலன்சர்ஸ் பெங்களுர் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ளது. மகாரஜா யாதவிந்திரா முல்லாப்பூர் மைதானத்தில் இன்றிரவு உள்ளூர் நேரப்படி 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது. இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் பஞ்சாப் கிங்ஸ் அணி 14 போட்டிகளில் விளையாடி 9 வெற்றி, 4 தோல்விகளுடன் 19 புள்ளிகளுடன்...

டொனால்ட் ட்ரம்க்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்புக்கு தடை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ட்ரம்ப் அதிகாரத்தை மீறி செயல்படுவதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 'டாஜ்' என்ற துறையில் இருந்து விலகுவதாக தொழிலதிபர் எலான் மஸ்க் அதிரடியாக அறிவித்துள்ளார். ட்ரம்ப் அளித்த பதவியில் பணியாற்ற 130 நாட்கள் மஸ்க் ஒப்புக்கொண்டிருந்த நிலையில்...
- Advertisement -spot_img

Latest News

சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு கடுங்காவல் தண்டனை!

15 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தம்ம பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு, மொனராகலை உயர் நீதிமன்ற நீதிபதி டொக்டர் தமித் நலிந்த...
- Advertisement -spot_img