2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலைப் பாடப்புத்தகங்களை அச்சிட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
மொத்தம் 366 பாடப்புத்தகங்களுக்கு 27.12 மில்லியன் பிரதிகள் அச்சிடப்பட வேண்டும். இதற்காக தேசிய போட்டி விலை மனு முறைமையின்படி விலை மனுக்கள் கோரப்பட்ட நிலையில், 29 நிறுவனங்கள் மனுக்கள் சமர்ப்பித்தன.
உயர்மட்ட பெருகைக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், 3,491.47 மில்லியன் ரூபாய் செலவில், குறித்த 29 நிறுவனங்கள் மூலம் 25.49 மில்லியன் பிரதிகள் அச்சிடுவதற்கான பிரதமரின் யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.








