2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் இரண்டாம் நாள் இன்று (10) பாராளுமன்றத்தில் தொடங்க உள்ளது.
நாடாளுமன்றத் தொடர்புத் துறையின்படி, வரவுசெலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு விவாதம் மொத்தம் ஆறு நாட்கள் நடைபெறும். இதற்கான வாக்கெடுப்பு நவம்பர் 14 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெற உள்ளது.
அதனைத் தொடர்ந்து, குழுநிலை விவாதம் நவம்பர் 15ம் திகதி முதல் டிசம்பர் 5ம் திகதி வரை 17 நாட்கள் நடைபெறும். மூன்றாம் வாசிப்பு மீபட்டுள்ளது.
பொது விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர, பட்ஜெட் காலத்தில் ஒவ்வொரு நாளும் விவாதங்கள் நடத்தப்படவுள்ளன என நாடாளுமன்றத் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சமர்ப்பித்த 2026 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவின்படி, அரசாங்கத்தின் அடுத்தாண்டுக்கான எதிர்பார்க்கப்படும் வருவாய் ரூ. 5,300 மில்லியனாகவும், செலவுகள் ரூ. 7,057 மில்லியனாகவும் கணிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறை ரூ. 1,757 மில்லியன் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 5.1% ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.








