இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்தும் நோக்கில், 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ரூ. 35.6 பில்லியன் (சுமார் USD 120 மில்லியன்) ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது, வலுவான டிஜிட்டல் பொருளாதாரம் ஒன்றை உருவாக்கும் அரசின் நீண்டகால இலக்குடன் இணங்குகின்றது. இதில், தேசிய டிஜிட்டல் அடையாள அமைப்பு, தரவு பரிமாற்ற தளம், மற்றும் மேம்பட்ட டிஜிட்டல் உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல முக்கிய திட்டங்கள் அடங்கும்.
ஜனாதிபதியும் நிதியமைச்சருமான அனுர குமார திசாநாயக்க, டிஜிட்டல் மயமாக்கல் நாட்டின் அனைத்து பிராந்தியங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்:
இலங்கை தரவு மையங்கள் அமைத்தலுக்கான தென் ஆசிய பிராந்திய மையமாக உயர முடியும்.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க வரி சலுகைகள், பசுமை எரிசக்தி ஊக்குவிப்பு, குறைந்த விலை மின்சாரம், மற்றும் சலுகை விலையில் நிலம் வழங்குவது முக்கியம் என வலியுறுத்தினார்.
இந்த வரவு செலவு திட்டத்தில்
தரவு மையங்களுக்கான ஆரம்ப முதலீடு
2026 ஆம் ஆண்டில், தரவு மையத் திட்டங்களை ஆரம்பிக்க ரூ. 500 மில்லியன் (USD 1.6 மில்லியன்) ஒதுக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் உள்கட்டமைப்பு – விரைவான அனுமதி & வரி விடுபாடு
நாட்டில் தகவல் தொடர்பு கோபுரங்கள் போன்ற டிஜிட்டல் உள்கட்டமைப்புகளை அமைப்பதற்கான ஒப்புதல் செயல்முறை எளிமைப்படுத்தப்படும்.
மேலும்,
புதிய கோபுரங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு வரி விலக்கு வழங்கப்படும்.
டெக் ஸ்டார்ட்அப்களுக்கு ரூ. 1.5 பில்லியன் நிதி
புதுமைகளை ஊக்குவிக்க:
2026 ஆம் ஆண்டில் புதிய ஸ்டார்ட்அப் நிதி அறிமுகம்
இதற்காக ரூ. 1.5 பில்லியன் (USD 5 மில்லியன்) ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது
BOI மூலம் மெய்நிகர் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்படும்
இந்த மண்டலங்கள்,
ஏற்றுமதி அதிகரிப்பும்
வேலைவாய்ப்பு உருவாக்கமும் இலக்காகக் கொண்டுள்ளன.
டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை (e-NIC) – அடுத்த ஆண்டு
முதல் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்படும்.
அரசாங்கம்,
e-NIC
SL-UDI (Sri Lanka Unique Digital Identity)
இவற்றை ஒருங்கிணைக்கிறது.
இந்த அமைப்பை உருவாக்க, ஐந்து இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் குறுகிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
AI தரவு மையம் – ரூ. 750 மில்லியன்
வளரும் தொழில்நுட்பங்களில் முன்னேற:
AI Data Center அமைக்க ரூ. 750 மில்லியன் (USD 2.5 மில்லியன்) ஒதுக்கீடு.
அனைத்து அரசாங்க கட்டணங்களும் டிஜிட்டல் முறைக்கு மாற்றம்
டிஜிட்டல் கொடுப்பனவுகளை ஊக்குவிக்க:
அனைத்து அரசு பரிவர்த்தனைகளும் டிஜிட்டல் கட்டண முறைக்கு மாற்றப்படும்.
ரூ. 5,000 க்கும் குறைவான பரிவர்த்தனைகளுக்கு
சேவை கட்டணம் ரத்து
QR கட்டண கட்டணங்கள் விலக்கு
இணைய விரிவாக்கத்துக்கு வரிச் சலுகைகள்
தனியார் துறையின் இணைய உள்கட்டமைப்பு முதலீடுகளுக்கு வரி சலுகைகள்
மாணவர்களின் ஆன்லைன் கல்விக்கான பிராட்பேண்ட் வவுச்சர்கள்
நாடு முழுவதும் IT மண்டலங்களை மீண்டும் செயல்படுத்துதல். போன்ற செயற்பாடுகளுக்கு 2026ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.








