அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான விசாரணையை நிறைவு செய்த உச்ச நீதிமன்றம், அந்த சட்டமூலத்தின் அரசியலமைப்பு செல்லுபடியாகும் தன்மை தொடர்பான இரகசிய தீர்மானத்தை பாராளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பி வைக்கும் என இன்று (2) தெரிவித்தது.

சம்பந்தப்பட்ட சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், அந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்காக ஆஜரான சட்டத்தரணிகள் மற்றும் சட்டமா அதிபரால் முன்வைக்கப்பட்ட வாதங்களை பரிசீலித்த பின்னர், பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான 5 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதியரசர் குழுவால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த மனுக்கள் தொடர்பான எழுத்து மூல வாதங்கள் இருப்பின் அவற்றை நாளை (3) பி.ப 3.00 மணிக்கு முன்னர் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் நீதியரசர் குழு தரப்பினருக்கு உத்தரவிட்டது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here