22வது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பில் ஜனாதிபதி மேற்கொண்ட கருத்தை சிலர் தவறாக பொருள் கொள்கிறார்கள் என்று அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.

22வது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என புலத்சிங்களவில் நடைபெற்ற மக்கள் கூட்டத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதியின் இந்த கருத்து தொடர்பில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில் ஜனாதிபதியின் இந்த கருத்து தொடர்பில் எதிர்க்கட்சி மேற்கொள்ளும் விமர்சனங்களுக்கு,  அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பதிலளித்துள்ளார்.

நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டிய பின்னணியில், ஜனாதிபதி தீர்ப்பு கிடைத்தவுடன் உடனடியாக நிறைவேற்றுவோம் என கூறினார்.

இது நீதிமன்ற கட்டமைப்பை சீர்குலைக்கும் கருத்தாகும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்திருந்தன.

இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர், உச்ச நீதிமன்றம் சட்டமூலம் குறித்து என்ன தீர்ப்பு வழங்கினாலும், உச்ச நீதிமன்றம் வழங்கக்கூடிய முதல் தீர்ப்பு என்னவென்றால், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அது நிறைவேற்றப்பட வேண்டும் அத்துடன் மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதாகும்.

இல்லையென்றால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவதுடன், மக்கள் வாக்கெடுப்பு தேவையில்லை என்பதாகும்.

இதற்கமைய இரண்டு சந்தர்ப்பங்களிலும் கட்டாயம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அது  நிறைவேற்றப்பட வேண்டும் என்பது உறுதியான விடயமாகும், இதனையே ஜனாதிபதி தெரிவித்தார் என அவர் விளக்கமளித்துள்ளார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here