இந்துக்களின் விசேட வழிபாட்டு நாளான ஆவணி வளர்பிறை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து ஸ்வயம் சேவக சங்கத்தினால் விசேட கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எதிர்வரும் 20 ஆம் திகதி  அனுட்டிக்கப்பட உள்ள விநாயகர் சதுர்த்தி தினத்தில் கொட்டகலை பகுதியில் கோலாகல ஊர்வலம் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட உள்ள நிலையில் இது குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் இந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் செயலாளர் காமதேவன் , சங்கத்தின் பொறுப்பாளர் சசிக்குமார், கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் வடிவேல், ஸ்ரீ பாத கல்வியற் கல்லூரியின் ஓய்வு பெற்ற முன்னாள் கோட்ட கல்வி பணிப்பாளர் சஞ்ஜிவி மற்றும் கொட்டகலையை சேர்ந்த 14 கிராமங்களின் தலைவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்துள்ளனர்.

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here