தென்மேற்கு பருவமழை காற்றின் ஓட்டம் வலுவடைவதால், நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் சில நேரங்களில் மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொள்கிறார்கள்.
மேலும் தகவலுக்கு, பேரிடர் மேலாண்மை மையத்தை 117 அவசர ஹாட்லைன் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.








