இலங்கை வரலாற்றில் இன்று (17) 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 4 லட்சத்தை கடந்துள்ளது. செட்டியார் தெரு தங்க சந்தை தகவல்களின்படி, 24 கரட் தங்கத்தின் விலை இன்று 4,10,000 ரூபாய் என பதிவாகியுள்ளது.

நேற்றைய தினத்துடன் (16) ஒப்பிடுகையில், 24 கரட் தங்கத்தின் விலை 15,000 ரூபாய் அதிகரித்துள்ளது.

அதேநேரம், 22 கரட் தங்கத்தின் விலை இன்று 3,79,200 ரூபாய் என உயர்ந்துள்ளது. நேற்றைய தினம் 22 கரட் தங்கத்தின் விலை 3,65,400 ரூபாய் இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here