கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 58 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவற்றில் 13 முறைப்பாடுகள் தேசிய தேர்தல் முறைப்பாடுகள் முகாமைத்துவ நிலையத்திற்கும், 45 மாவட்ட தேர்தல் முறைப்பாடுகள் முகாமைத்துவ நிலையங்களுக்கும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 26ஆம் திகதி தொடக்கம் இம்மாதம் 19ஆம் திகதி வரை தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் மொத்தம் 401 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.







