எந்தவொரு வெளியுலக செல்வாக்கு அல்லது அழுத்தங்கள் இன்றி தேர்தல் சட்டங்களை மீறினால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

யாராக இருந்தாலும் சிறிலங்கா பொலிஸார் நியாயமான மற்றும் சட்டபூர்வமான நடவடிக்கையை மேற்கொள்வார்கள் என பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

“எந்தவொரு அரசியல் அல்லது வேறு அதிகாரங்களாலும் நாங்கள் பாதிக்கப்படவில்லை. சட்டத்தின்படி தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்” என்று பொலிஸ் மா அதிபர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here