2024ஆம் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 3000க்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்கள் நீதிமன்றத்தினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தவருடம் ஜனவரி மாதம் முதல் 3,249 சாரதி அனுமதிப்பத்திரங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பணிப்பாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்தார்.
சாரதிகளால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் நடைபெற்ற விசாரணைகளின் போதே நீதிமன்றங்கள் இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.








