Tamil News Channel

33 பந்துகளில் சதம் குவித்து சாதனைபடைத்த லொஃப்டி ஈட்டன்!

சர்வதேச T20 கிரிக்கெட் போட்டியில் அதிவேக சதம் குவித்து வீரர் என்ற உலக சாதனையை நமிபியா வீரர் ஜான் நிகொல் லொஃப்டி ஈட்டன் (Jan Nicol Loftie-Eaton) நிலைநாட்டியுள்ளார்.

நேபாளத்தின் கீர்த்திபூரில் நடைபெற்று வரும் மும்முனை சர்வதேச கிரிக்கெட் தொடரில் நேபாளத்துக்கு எதிரான போட்டியில் லொஃப்டி ஈட்டன் (Loftie-Eaton) 33 பந்துகளில் சதம் குவித்து இந்த சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் நேபாள வீரர் குஷால் மல்லாவினால் (Kushal Malla) நிலைநாட்டப்பட்ட சாதனையை ஈட்டன் (Eaton) முறியடித்திருப்பது விசேட அம்சமாகும்.

11ஆவது ஓவரில் 3ஆவது விக்கெட் வீழ்ந்த பின்னர் களம் புகுந்த 22 வயதான லொஃப்டி ஈட்டன் (Loftie-Eaton) 36 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகள், 8 சிக்ஸ்களுடன் 101 ஓட்டங்களைப் பெற்று கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தார்.

கடந்த 32 T20 போட்டிகளில் அவர் வெறும் 182 ஓட்டங்களையே பெற்று 10.70 என்ற மிக மோசமான சராசரியைக் கொண்டிருந்தார்.

லொஃப்டி ஈட்டனைத் (Loftie-Eaton) தொடர்ந்து நேபாள வீரர் குஷால் மல்லா (Kushal Malla) 34 பந்துகளில் சதம் பெற்று அதிவேக சதம் குவித்து வீரர் வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளதோடு தென் ஆபிரிக்க வீரர் டேவிட் மில்லர் (David Miller) இந்திய வீரர் ரோஹித் ஷர்மா (Rohit Sharma) மற்றும் செக் குடியரசு வீரர் சுதேஷ் விக்ரமசேகர (Sudesh Wickramasekara) ஆகியோர் 35 பந்துகளில் சதம் பெற்று அடுத்த இடங்களில் உள்ளனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts