ரயில் சாரதிகள் மற்றும் சாரதி உதவியாளர்கள் இல்லாத காரணத்தினால் இன்று 33 ரயில் சேவைகள் இரத்துச்செய்யப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

சாரதிகள் மற்றும் உதவி சாரதிகள் கடமைக்கு சமுகமளிக்காத காரணத்தினால் இன்று (14) காலை இடம்பெறவிருந்த 10 ரயில் சேவைகள் இரத்துச்செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

தற்போது சாரதிகள் மற்றும் சாரதி உதவியாளர்கள் இல்லாத காரணத்தினால் இன்று 23 கூடுதல் ரயில் பயணங்களை இரத்துச்செய்ய வேண்டும்.

அதன்படி, பிரதான பாதையில் 13 ரயில் சேவைகளும் கரையோரப் பாதையில் 8 ரயில் சேவைகளும் புத்தளம் பாதையில் 6 ரயில்களும் களனி வெளி பாதையில் மேலும் 6 ரயில்களும் இன்று இரத்துச்செய்யப்படவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here