Tamil News Channel

532 வாக்களிப்பு நிலையங்களில் நுவரெலியா வாக்காளர்கள் வாக்களிக்கலாம்..!

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 532 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களார்கள் வாக்குகளை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி நந்தன கலபட தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 605292 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

532 வாக்களிப்பு நிலையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதுடன், 8500 அதிகாரிகளும், 600 வாகனங்களும் தேர்தல் கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தேர்தல் நாளில் மாலை 6 மணிக்குள் நுவரெலியா மாவட்டத்தில் முதலாவது வாக்குப் பெட்டிகள் கிடைக்கும் என நம்பப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தின் தபால் மூல வாக்குகளின் பெறுபேறுகளை இரவு 10 மணிக்கு முன்னர் வழங்குவதற்கு நாங்கள் பணியாற்றி வருகிறோம், இதற்கு நுவரெலியா காமினி தேசிய பாடசாலை பிரதான வாக்கு எண்ணும் மையமாக பயன்படுத்தப்படவுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் தேர்தல் வன்முறைகள் பெரிதாக பதிவாகவில்லை எனவும் சிறிதளவு மட்டுமே பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts