சித்திரைப் புத்தாண்டினை சிறப்பிக்கும் முகமாக இலங்கைப் பாதுகாப்பு படைப்பிரிவின் 55 ஆவது காலாற் படையணியின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் இன்றைய தினம் (4/19/2025) கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் சிறப்பான முறையில் இடம்பெற்றது.

இதன் ஆரம்ப நிகழ்வாக இன்று காலை 6.00 மணியளவில் ஆண் பெண் இருபாலாருக்குமான துவிச்சக்கர வண்டி ஓட்டம் மற்றும் மரதனோட்ட போட்டிகள் நடைபெற்றது.

இந்த ஆரம்ப விளையாட்டு நிகழ்வினை கிளிநொச்சி மாவட்ட 55 ஆவது காலாற்படைப் பிரிவின் தளபதி மேஜர்ஜென்ரல் சம்பத் பெனான்டோ அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

அத்துடன் சித்திரைப் புத்தாண்டினை சிறப்பிக்கும் வகையில் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் படை முகாம்களின் கட்டளை தளபதி மேஜர்ஜென்ரல் மானத யாம்பத் கிளிநொச்சி சந்திரசேன இதனைத் தொடர்ந்து மைதான விளையாட்டுக்களான வழுக்குமரம் ஏறுதல், தலையணைச் சண்டை முதலான பல பாரம்பரிய விளையாட்டுக்கள் இடம்பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த விளையாட்டு விழாவின் இரவு நிகழ்வாக ‘அக்னி ‘ இசைக்குழுவின் இன்னிசை நிகழ்வு இடம்பெறவிருக்கின்றது.

[கிளிநொச்சி  நிருபர் – பரமசிவன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here