உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா (Meta), சுமார் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

நிறுவனத்தின் AI பிரிவு தலைமை அதிகாரி அலெக்சாண்டர் வாங், இந்நடவடிக்கை நிறுவனம் மேற்கொண்டு வரும் மறுசீரமைப்பு முயற்சியின் ஒரு பகுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த பணிநீக்கம் AI உள்கட்டமைப்பு அலகுகள், அடிப்படை செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி பிரிவு (FAIR) மற்றும் பிற தயாரிப்பு தொடர்பான பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்களை பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் AI பிரிவில் புதிதாக 50 பேர் நியமிக்கப்பட்டிருந்தாலும், நீண்ட காலமாக பணியாற்றி வந்த சில ஊழியர்கள் தற்போது பணிநீக்கத்தின் கீழ் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபகாலமாக AI தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சி காரணமாக, பல தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் மனிதவள அமைப்புகளை மாற்றி அமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here