சீனாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென ஜப்பானிய புதிய பிரதமர் சானே தகைச்சி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப்க்கும் ஜப்பானிய புதிய பிரதமர் சானே தகைச்சிக்கும் இடையில் இன்று பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
இந்த பேச்சுவார்த்தையின் போது அமெரிக்காவுடனான உறவை வலுப்படுத்துவது தொடர்பில் ஜப்பானிய பிரதமர் உறுதியளித்தார்.
மேலும், “அண்டை நாடுகளான சீனா, வட கொரியா மற்றும் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகள் பெரும் கவலையளிப்பதாகவும் தெரிவித்தார்.
“ஜப்பானை சீனா முற்றிலுமாக இழிவாகப் பார்க்கிறது” என்றும், சீனாவின் “பாதுகாப்பு அச்சுறுத்தலை’ எதிர்கொள்ளவேண்டுமென்றும் அவர் எச்சரித்தார்.
இதேவேளை தாய்வானுடனான கூடுதல் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் ஜப்பான் பிரதமர் கூறியுள்ளார்.
இதேவேளை ஜப்பானின் புதிய முதல் பெண் பிரதமருக்கு வரும் மாதங்களில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கவேண்டியுள்ளது.
குறிப்பாக சீரான பொருளாதாரம் மற்றும் குறைந்து வரும் மக்கள் தொகை போன்றவற்றுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் ஜப்பானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.








