கடந்த 7 மாதங்களில் 198 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு, ரயில் மற்றும் வாகன மோதல், வேட்டையாடுதல் மற்றும் இயற்கை காரணங்கள் உட்பட பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை மாத்திரம் நான்கு யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் அவற்றில் இரண்டு யானைகள் ரயிலில் மோதி உயிரிழந்ததுடன் ஏனைய இரண்டு யானைகள் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், காயமடைந்த 13 காட்டு யானைகள் வனவிலங்கு அதிகாரிகளிடம் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here