சீரற்ற காலநிலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதுளை, கண்டி, கேகாலை, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பதுளை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நிலவும் மழையுடனான காலநிலையினால் தெதுறு ஓயா, மகாவலி கங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகியவற்றின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த நீர்நிலைகளை அண்டிய தாழ் நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ளம் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here