மன்னார் நகரில் சுமார் எட்டு இலட்சம் பெறுமதியான கேரளாக் கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் வெள்ளிக்கிழமை (08.11.2024) கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,

மன்னார் இராணுவப்  புலனாய்வுப் பிரிவினர் மற்றும்  திருகோணமலைப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளும் இணைந்து மன்னார் நகரில் மேற்கொண்ட  சோதனையில் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய சந்தேக நபரொருவர்  கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சந்தேக நபரிடம் சுமார் எட்டு இலட்சம் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சாவை மன்னார் நகர் பகுதியில் தன் வசம் வைத்துக் கொண்டு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த பொழுதே கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரையும்  கேரள கஞ்சாவுடன்  மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here