1951ஆம் ஆண்டு எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க தலைமையில் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) 73வது ஆண்டு நிறைவு இன்று அனுசரிக்கப்படுகிறது. மத்தியவாத நிலைப்பாட்டிற்கு பெயர் பெற்ற ஸ்ரீ.ல.சு.க நாட்டின் அரசியல் நிலப்பரப்பில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது.
ஆரம்பிக்கப்பட்டு ஐந்து வருடங்களின் பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மஹாஜன எக்சத் பெரமுனவின் ஆதரவுடன் பலமிக்க கட்சியானது.
1956 இல் வைத்தியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்ட முக்கிய சமூக குழுக்களை ஒன்றிணைத்து, இலங்கையின் நான்காவது பிரதமராக பண்டாரநாயக்கா ஆட்சிக்கு வந்திருந்தார்.
அதன்படி முன்னர் பன்னாட்டு நிறுவனங்களின் கீழ் இருந்த வணிகங்கள் மற்றும் பொருளாதார மையங்கள் தேசியமயமாக்கப்பட்டது. மற்றும் சிங்களத்தை உத்தியோகபூர்வ மொழியாக அறிவித்திருந்தார்.
பல தசாப்தங்களாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அதன் கூட்டணி இடதுசாரிக் கட்சிகளும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை ஆட்சியில் இருந்தது.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நிறுவப்பட்டதைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 21 வருடங்கள் கூட்டாக பதவி வகித்த இரண்டு ஜனாதிபதிகளை உருவாக்கியது.
உலகின் முதல் பெண் பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயக்கவினால் 41 வருடங்களாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமை தாங்கி இலங்கை அரசியலில் அதன் பாரம்பரியத்தை மேலும் உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.








