யக்கல – கம்பஹா வீதியில் யக்கல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கம்பஹாவில் இருந்து யக்கல நோக்கி பயணித்த வேனுடன் மோதலுக்குள்ளாகி யக்கல பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்தை அடுத்து, வேனை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு சாரதி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் யக்கல பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.







