இந்தியன் பிரீமியர் லீக்கில் இந்திய வீரர் ஒருவரால் அதிக சிக்ஸர்களைப் பதிவு செய்ததன் மூலம் விராட் கோலியின் எட்டு ஆண்டுகால சாதனையை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் துடுப்பாட்ட வீரர் அபிஷேக் சர்மா முறியடித்தார்.

நடப்பு ஐபில் தொடரின் தனது இறுதி லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிரத்து விளையாடிய போது சன்ரைசர்ஸ் அணியின் 23 வயதான அபிஷேக் சர்மா இந்த சாதனையை நிகழ்த்தினார்.

அபிஷேக் சர்மா நடப்பு ஐபிஎல் தொடரில் 41 சிக்ஸர்களை அடித்துள்ளார். இதன்மூலம் 2016 ஆம் ஆண்டு விராட் கோலி அடித்திருந்த 38 சிக்ஸர்கள் என்ற சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

அவர் இந்தப் போட்டியில் 21 பந்துகளில் அரைச்சதம் அடித்தார். மொத்தம் 28 பந்துகளை எதிர்கொண்ட அவர் ஐந்து நான்கு ஓட்டங்கள் ஆறு சிகஸர்கள் அடங்களாக 66 ஓட்டங்களை குவித்தார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் அபிஷேக் சர்மா இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 38.91 சராசரியிலும், 209.41 என்ற ஸ்ட்ரைக் ரேட்டிலும் 467 ஓட்டங்களை குவித்துள்ளார்

இதற்கிடையில், நடப்பு சீசனில் 14 போட்டிகளில் 37 சிக்ஸர்களை அடித்து தனது சாதனையை மீட்டெடுக்க விராட் கோலி போராடி வருகின்றார்.

இதுவரை 14 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 64.36 என்ற சராசரியிலும், 155.60 ஸ்டிரைக் ரேட்டிலும் 708 ஓட்டங்களை குவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here