கிளிநொச்சி, இரணைதீவு பகுதியில் 8 கோடி ரூபாவுக்கும் அதிகமான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
மேற்கு கடற்படை கட்டளை அதிகாரி வழங்கிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, 6 சந்தேகத்திற்கிடமான பைகளில் 207 கிலோகிராம் கேரள கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.







