தக்காளி விலை சந்தையில் வேகமாக வீழ்ந்துள்ளதால், பல பிரதேசங்களில் உள்ள விவசாயிகள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.
தற்போது, ஒரு கிலோகிராம் தக்காளி ரூ.15 முதல் ரூ.20 வரை மட்டுமே வர்த்தகர்களால் கொள்வனவு செய்யப்படுகின்றது என்று விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
வெலிமடை, எல்ல, அடம்பிட்டி, நெலுவ, ஹாலிஎல, பண்டாரவளை உள்ளிட்ட பிரதேசங்களில் தற்போது தக்காளி அறுவடை நடைபெற்று வருகின்றது.
இருப்பினும், கடந்த காலங்களில் ஒரு கிலோ தக்காளி ரூ.900 – 1000 வரை விற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தற்போதைய விலை வீழ்ச்சி, உற்பத்திச்செலவையே மீட்க முடியாத அளவிற்கு உள்ளதாகவும், இவ்வாறு தொடரும் பட்சத்தில் பலரும் தக்காளி விவசாயத்தை கைவிட வேண்டிய நிலைக்குச் செல்லக் கூடும் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.








