கொழும்பில் இருந்து புத்தளம் ஊடாக யாழ்ப்பாணத்துக்கான பேருந்து சேவைகள், இணைந்த கால அட்டவணைக்கு அமைய எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்படவுள்ளன.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

அதன்படி, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மற்றும் தனியார் பேருந்து சேவைகள் அடுத்த வாரம் முதல் கொழும்பு பெஸ்டியன் மாவத்தையில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதனால் பேருந்து சேவைகளில் தற்போதுள்ள போட்டி தன்மை நீக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் கொழும்பில் இருந்து கால அட்டவணைக்கு அமைய குறித்த பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here