நாட்டின் முன்னணி பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ஐவரும் பெண் ஒருவரும் இந்தோனேசிய பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த, பாணந்துரை நிலங்க, பெக்கோ சமன், தெம்பிலி லஹிரு ஆகியோர் அடங்குவதாகவும், குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், பெக்கோ சமனின் மனைவியும் மூன்று வயது குழந்தையும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவதாகக் கூறப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட குழுவும் ஜகார்த்தா பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.







