திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள தங்கநகர் பகுதியில் யானை தாக்குதலுக்குள்ளாகி  நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று சனிக்கிழமை(30) காலை இடம்பெற்றுள்ளது.
தம்பியன் என்றழைக்கப்படும் தங்கநகர் பகுதியைச் சேர்ந்த 58 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இரவு வயலுக்குச் சென்றுவிட்டு காலை வீடு திரும்பும் வேளையில் தோட்டம் ஒன்றிற்குள் மறைந்திருந்த யானை குறித்த நபரை தாக்கியதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

யானை தாக்குதலால் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டவண்ணமே இருப்பது யுத்தத்தினால் நாளாந்தம் தமது உடன்பிறப்புக்களை இழந்து உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழ்ந்த மக்களுக்கு இன்று யானை தாக்குதல் அதைபோல் நிகழ்வது என்பது கவலையை ஏற்படுத்துவதாக பிரதேச வாசி மக்கள் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்திற்குல் கடந்த மாதமும் மூன்று உயிர்கள் யானையால் தக்குதலால் பறிபோனமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here