தமது வாழ்க்கைப் பயணத்தை ஆரம்பித்த தங்காலையில் மீண்டும் தனது அடுத்தடுத்த வாழ்க்கைப் பயணத்தைக் கொண்டு செல்ல முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திரும்பியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
விஜேராம இல்லத்தில் இருந்து இன்று மஹிந்த ராஜபக்ஷ வெளியேறியதை அடுத்து, தனது சமூக ஊடகங்களில் பதிவிட்ட நாமல் ராஜபக்ஷ,
“தாய் நாட்டின் மக்கள் மீது அவர் கொண்டுள்ள உணர்திறன், மக்கள் அவர்மீது கொண்டுள்ள அன்பும் ஆசீர்வாதங்களும் அவரது உண்மையான சொத்துக்கள்” எனக் குறிப்பிட்டார்.
மேலும், இன்றும் நாளையும் எதிர்காலத்திலும் அசைக்க முடியாத தலைமையை மஹிந்த ராஜபக்ஷ கொண்டிருப்பார் எனவும் நாமல் ராஜபக்ஷ தனது பதிவில் வலியுறுத்தினார்.








