தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று நள்ளிரவு மூன்று சிறுவர்கள் உட்பட எட்டு பேரை ஏற்றிச் சென்ற சிற்றூர்தி ஒன்று , பாரவூர்தியுடன் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண் தவலமவில் பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
இஸ்ரேலில் பணிபுரிந்த ஒருவரை இன்று நாட்டிக்கு அழைத்து வருவதற்காக தவலமயில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு பயணித்த சிற்றூர்தியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.








