வெனிசுலா கடற்கரையில் போதைப்பொருள் கடத்த முயன்றதாகக் கூறப்படும் கப்பல் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இதேபோன்ற ஒரு தாக்குதல் கடந்த 3 ஆம் திகதியும் அமெரிக்க இராணுவத்தினரால் நடத்தப்பட்டிருந்தது. அந்த தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சமூக ஊடகத்தில் வெளியிட்ட 28 வினாடிகள் கொண்ட வீடியோவில், கப்பல் எரியும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அதனுடன் அவர், “அமெரிக்கர்களின் உயிரை பறிக்கும் போதைப்பொருட்களை கடத்த முயல்பவர்களை நாங்கள் வேட்டையாடுவோம். தேசிய பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கை அவசியமானது என வலியுறுத்தினார்.

இந்த கருத்தும், தாக்குதல் சம்பவமும் உலக அளவில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

வெனிசுலா அரசு, அமெரிக்க இராணுவத்தின் செயற்பாட்டை கடுமையாக கண்டித்ததுடன், இது சர்வதேச சட்டத்தை மீறிய தாக்குதல் எனவும் விமர்சித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here