அரசியல் செயற்பாட்டாளர் டேன் பிரியசாத்தின் கொலை தொடர்பில் சந்தேகிக்கப்படும் ஒரு துப்பாக்கிதாரி கேகாலை, ரங்வல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சந்தேகநபர் உட்பட மூவர் நேற்று (18) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண் ஒருவரும் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் கேகாலை மற்றும் வெலிஓய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களில் ஒருவர் இராணுவத்தில் இருந்து சட்டப்பூர்வமாக விலகியவர் என்றும் கூறப்படுகிறது.

கைது நேரத்தில் சந்தேகநபர்களிடம் இருந்து 12,400 சட்டவிரோத சிகரெட்டுகள் மற்றும் பல கஜமுத்துக்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here