ஆசிய கிண்ண டி20 தொடரின் சூப்பர் 4 சுற்றுப்போட்டிகள் இன்று (20) ஆரம்பமாகின்றன.
முதல் ஆட்டமாக, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதவுள்ளன.
இந்த ஆட்டம் உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு ஆரம்பமாகும்.
சூப்பர் 4 சுற்றில், இலங்கை அணி மொத்தம் மூன்று போட்டிகளில் பங்கேற்கிறது.
செப்டம்பர் 23 அன்று அபுதாபியில் பாகிஸ்தானுக்கு எதிராக
செப்டம்பர் 26 அன்று துபாயில் இந்தியாவுக்கு எதிராக
சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிரு இடங்களைப் பெறும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.







