இன்றைய தினம்(20) ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா நடைபெறுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மற்றும் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த விழா நடைபெற உள்ளதாக கட்சி அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த விழாவிற்கு ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் அனைத்து எதிர்க்கட்சிகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.








