நாட்டில் இன்று (23ஆம் திகதி) தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வை எட்டியுள்ளது.

செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, ஒரு பவுண் தங்கத்தின் விலை ரூ.1800 உயர்ந்துள்ளது.

நேற்று (22ஆம் திகதி) 22 கரட் தங்கத்தின் விலை ரூ.2,77,500 ஆகவும், 24 கரட் தங்கத்தின் விலை ரூ.3,00,000 ஆகவும் இருந்தது.

இந்நிலையில், இன்று 22 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.2,79,300 ஆகவும், 24 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.3,02,000 ஆகவும் உயர்ந்துள்ளது.

இந்த மாதம் தொடக்கத்தில் (செப்டம்பர் 1) 22 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.2,57,200 ஆகவும், 24 கரட் தங்கம் ரூ.2,78,000 ஆகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தங்கம் வாங்க விரும்பும் நுகர்வோர் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இது முக்கியமான தகவலாக இருக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here