நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் இன்று (செப்டம்பர் 30) ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் அறிவித்துள்ளது.
அரசாங்கம், பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதை முன்னிட்டு, இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது.
பல்கலைக்கழகங்களின் தற்போதைய சூழ்நிலை குறித்து அதே சங்கத்தின் செயலாளர், சிரேஸ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க கருத்து தெரிவித்துள்ளார். “அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துவிட்ட போதிலும், அரச பல்கலைக்கழகங்களில் நிலவும் நெருக்கடிகளுக்கு இதுவரை எந்தவொரு தீர்வும் காணப்படவில்லை,” என அவர் கூறினார்.
மேலும், தற்போது அரச கல்வி வீழ்ச்சியடைந்து கடுமையான நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்தார்.
சிறப்பாக, பேராதனை பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 200 பேராசிரியர்கள் பணியிலிருந்து விலகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது, கல்வியின் தரம் மற்றும் பணியாளர்களின் நிலைமையைப் பற்றி முக்கிய சிந்தனைகளை ஏற்படுத்தும் வகையிலும், கல்விக்காக அரசு எடுத்துக்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கைகளை வலியுறுத்தும் வகையிலும் இந்த பணிப்புறகணிப்பு அமைந்துள்ளது.







