இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் எதிர்கொள்ளும் பலவகையான சிக்கல்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்வதில் இலங்கையுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

‘காலி உரையாடல் – 2025’ என்ற தலைப்பில் இலங்கையில் நடக்கும் முக்கியமான மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்திருந்த பாகிஸ்தான் கடற்படையின் மூத்த பிரதிநிதிகள் குழு, இந்த முடிவை வலியுறுத்தியுள்ளது.

இந்தக் குழு பாகிஸ்தான் கடற்படையின் கடலோரப் பிராந்திய தளபதி, ரியர் அட்மிரல் பைசல் அமீன் தலைமையில் வந்திருந்தனர்.

இந்த சந்திப்பின் மூலம், இஸ்லாமாபாத் மற்றும் கொழும்பு இடையேயான நீண்டகால பாதுகாப்பு மற்றும் கடல்துறைக் கூட்டாண்மை உறவுகள் மேலும் வலுப்பெறுவதாகவும், பாகிஸ்தான் கடற்படையின் கொழும்பு மாநாட்டில் பங்கேற்பு, இருநாடுகளுக்கும் இடையிலான நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here