முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் பங்கேற்பில் நேற்று (02) இரவு கொழும்பில் உள்ள தனியார் விருந்தகத்தில் சிறப்பு சந்திப்பும் விருந்துபசாரமும் இடம்பெற்றது.
இந்த நிகழ்வு, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன அவர்களின் அழைப்பின் பேரில் நடைபெற்றது. இதில், 25க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
சந்திப்பில் பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆகியோர் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்த தங்கள் நிலைப்பாட்டை விளக்கினர். மேலும், எதிர்க்கட்சியின் தலைமையில் கொழும்பில் ஒரு பொதுக் கூட்டம் நடத்துவது குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
இந்நிகழ்வில் எதிர்காலத்தில் ஒன்றுபட்டு முன்னெடுக்க வேண்டிய முக்கிய அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த திட்டங்கள் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சந்திப்பு மிகவும் பயனுள்ளதும் முக்கியத்துவமிக்கதுமாக இருந்தது என ஐ.நா.கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.







