கம்பளை தொழுவப் பகுதியில் நடந்த துயர விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
அவர்கள் வீதியைக் கடக்க முயன்றபோது, வேகமாக வந்த சிற்றூந்து மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த சிற்றூந்து சாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போலீசார் சம்பவத்துக்கான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








