நிதியமைச்சு அறிவித்தபடி, குதிரைப் பந்தயப் பணயக்காரர்கள் மற்றும் சூதாட்டத் தொழில்முனைவோர் மீது அறவிடப்படும் மொத்த சேகரிப்பு வரி தற்போதைய 15% இலிருந்து 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய வரி 2025 அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

அதே நேரம், இலங்கை பிரஜைகள் கெசினோக்களில் நுழையச் செலுத்த வேண்டிய நுழைவுக் கட்டணமும் 100% அதிகரிக்கப்பட்டு, முன்னர் இருந்த 50 அமெரிக்க டொலர் கட்டணம் தற்போது 100 அமெரிக்க டொலர் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த வரி மாற்றங்கள் நாட்டின் வருவாயை வலுப்படுத்தவும், நிதிச் சவால்களை சமாளிக்கவும், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பரிந்துரைகளுக்கு இணங்க நிதி ஒழுக்கத்தை மேம்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறிப்பாக, உள்ளூர் பிரஜைகளுக்கான கெசினோ நுழைவுக் கட்டணத்தை உயர்த்துவது, சூதாட்ட பழக்கத்தை குறைத்தல் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வலுப்படுத்தும் நடவடிக்கையாகவும் குறிப்பிடப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here