ஹம்பாந்தோட்டையில் உள்ள மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் வனவிலங்குத் துறையின் பிரத்தியேக அலுவலகம் ஒன்றை அமைக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
சமீபகாலமாக காட்டு யானைகள் மற்றும் பிற விலங்குகள் விமான நிலைய வளாகத்திற்குள் நுழைந்து அணுகல் சாலைகளைக் கடக்கும் சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இதனால் விமான நிலையத்தின் உள்கட்டமைப்பு சேதமடைந்து, செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், புதிதாக நிறுவப்படவுள்ள இந்த அலுவலகம், வனவிலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து கட்டுப்படுத்தல், தாக்குதல்களைத் தடுப்பது மற்றும் பயணிகள், ஊழியர்கள், விமான நிலைய உள்கட்டமைப்பின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கிய பங்காற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.








