2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (O/L) பரீட்சையின் மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.
பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளங்களான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk மூலம் மாணவர்கள் தங்களது பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், மீளாய்வு பெறுபேறுகள் தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தை நேரடியாகத் தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.







