இலங்கையில் தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. நேற்று மாலை வரை 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 3,45,000 ரூபாயாக விற்பனையாகி வந்த நிலையில், இன்று 20,000 ரூபாயால் அதிகரித்து தற்போது 3,65,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது என்று இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 3,65,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 3,37,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 45,625 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 42,125 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உலக பொருளாதார மற்றும் அரசியல் நிலைமை குறித்த அச்சங்கள் அதிகரித்துள்ளதால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தைத் தேர்வு செய்து வருவதால், தங்கத்தின் விலை இவ்வாறு அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here