வெலிகம பிரதேச சபையின் தலைவர் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்துள்ளார்.
இன்று முற்பகல் குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
update-
காயமடைந்த பிரதேச சபையின் தலைவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
மோட்டர் சைக்கிளில் வந்த இனம் தெரியாத இருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பிரதேச சபையின் தலைவர் நாற்காலியில் அமர்ந்திருந்த போது, மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபைத் தலைவர் மிதிகம லசா எனப்படும் லசந்த விக்ரமசேகரவே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துவருகின்றனர்.








