யாழ்ப்பாணத்தில் 20 கிராம் ‘ஐஸ்’ (Ice) போதைப்பொருளுடன் இரண்டு நபர்கள் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினரின் மகனாகும் என தெரியவந்துள்ளது.
யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவின் கீழ் செயல்படும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில், குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 25 மற்றும் 23 வயதுடைய இளைஞர்கள்.
அவர்களில் ஒருவரிடமிருந்து அபாயகரமான வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.
கைதான இவர்கள், குற்றத்தடுப்புப் பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுத்து சம்பவத்தில் இருந்து தப்பிக்க முயற்சி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
யாழ் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு சம்பவ தொடர்பான மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.
சமீப காலத்தில் யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் 6 பேர் கைது செய்யப்பட்டிருப்பதை முன்னிட்டு, இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








