முல்லைத்தீவு – மாங்குளம் வீதியில் மணவாளன்பட்டமுறிப்பு பகுதியில் இன்று (30) காலை  பொலிஸ் ஜீப் வாகனம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

திடீரென மாடுகள் வீதிக்குக் குறுக்கே வந்ததால், வாகன ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் ஜீப் வீதியிலிருந்து விலகி தடம்புரண்டு கவிழ்ந்தது என தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் ஜீப்பில் பயணித்த பொலிசார் சிலர் லேசான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும், வாகனம் கடுமையாக சேதமடைந்தது என பொலிஸ் தகவல்கள் கூறுகின்றன.

சம்பவம் தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here