வாடகை வாகன பயண சேவைகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில், இன்று (நவம்பர் 01) முதல் நாட்டளவில் தரவுகள் சேகரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் (NTC) பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட 2025 ஆம் ஆண்டின் இலக்கம் 08 – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு திருத்தச் சட்டம் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றது.
இதன் மூலம், பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள், பாடசாலை வாகனங்கள், அலுவலக போக்குவரத்து வாகனங்கள், சிறப்புச் சுற்றுலா வாகனங்கள், வாடகை வாகனங்கள் போன்றவற்றின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தரவுச் சேகரிப்பு நடவடிக்கை, எதிர்காலத்தில் போக்குவரத்து துறையில் ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் சேவை தரத்தை மேம்படுத்துவதற்கான அடித்தளமாக அமையும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.








