கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக ஐந்து ஆண்கள் மற்றும் ஐந்து பெண்கள் என மொத்தம் 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுடலைக்குளம் பிரதேசத்தில் இடம்பெற்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பை மேற்கொண்ட அதிரடிப்படையினர் ஒருவரை கைது செய்தபோது, இரும்புக் கம்பிகள் மற்றும் பொல்லுகள் கொண்டு வந்த குழுவொன்று அதிகாரிகளைத் தாக்கி, கைதான நபரை விடுவித்து தப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இராமநாதபுரம் பொலிஸார் நடத்திய புலனாய்வில் குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த இரண்டு அதிரடிப்படையினர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 16 முதல் 32 வயதுக்குட்பட்ட ஆண்களும், 26 முதல் 45 வயதுக்குட்பட்ட பெண்களும் ஆவர்.

அவர்கள் அனைவரும் இன்று (நவம்பர் 3) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here